tamilnadu

img

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் என்பிஆருக்கு இடமில்லை! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் என்பிஆருக்கு இடமில்லை! கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உறுதி

திருவனந்தபுரம் கேரளத்தில், மக்கள் தொ கைக் கணக்கெடுப்பின் போது, என்பிஆர் (NPR) தொடர்பான தரவுகள் எதுவும் சேகரிக்கப்படாது என்று அம்மா நில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். “கேரளத்தில் என்பிஆருக்கு இடமில்லை! அரசியலமைப்பு உரி மையைக் காக்க, கேரள இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு உறுதி!!” என்ற தலைப்பில், பின ராயி விஜயன் தமது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்ப தாவது: “2027 மக்கள் தொகை கணக்கெ டுப்பின் போது, கேரளத்தில் தேசிய மக்கள் பதிவேடு தொடர்பான எந்தத் தரவும் சேகரிக்கப்படாது. என்பிஆர் மற்றும் என்ஆர்சி (NRC) போன்ற பாகுபாடான நடவடிக்கைகளை அனுமதித்து மக்களை அச்சுறுத்த விடமாட் டோம். சிஏஏ (CAA) சட்டத்திற்கு எதி ராக முதலில் நீதிமன்றம் சென்றதும், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றியதும் கேரளமே. எனவே, இந்திய அரசியலமை ப்புச் சாசனத்தின் விழுமியங்க ளைப் பாதுகாக்க கேரளம் உறுதி யுடன் நிற்கும். “கேரளத்தில் என்பிஆர் நடைமுறைப்படுத்தப் படாது என்பதை மீண்டும் உறு திப்படுத்துகிறோம்.”  இவ்வாறு பினராயி விஜயன் கூறியுள்ளார்.