SIR (Special Intensive Revision) நடவடிக்கைக்கு பிறகு தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
SIR பணிகள் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் மொத்தம் 97.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
மேலும் SIR படிவத்தில் 2002, 2005 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட வாக்காளர் அல்லது அவர்களின் உறவினர்களின் பெயர் தொடர்பான விவரங்களை வழங்காதவர்களுக்கும், விவரங்களில் ஏதேனு சந்தேகம் இருப்பினும் நோட்டீஸ் அனுப்பப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பும் பணியை மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
