பாதுகாப்பற்ற முறையில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் வடமாநிலத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாகப் புகார்
கிருஷ்ணகிரி, பிப். 22- கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக் கோட்டை அருகே நாகமங்கலத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஓசூர் உட்பட கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதிலும் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தர்மபுரி - ராயக்கோட்டை - ஓசூர் - பெங்க ளூரு தேசிய விரைவு நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏழு இடங்களில் பாலப்பணிகள், எஸ்டிஆர் சாலை, 2 உள்வட்டச் சாலைகள் என ஓசூரைச் சுற்றிலும் புதிய சாலை மற்றும் பாலப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணி களுக்காக, இப்பகுதியில் காய்கறி மற்றும் பூக்கள் அமோக விளைச்சல் தரும் தென்பெண்ணை ஆற்று நீர் ஆதாரத்தைக் கொண்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. ஒன்றிய பாஜக அரசு மக்கள் வசதிக்காகவே இந்தச் சாலை கள் அமைக்கப்படுவதாகக் கூறி னாலும், கார்ப்பரேட் நிறுவனங்க ளின் நலனுக்காகவே இவை உரு வாக்கப்படுகின்றன எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டு கின்றனர். தொழிலாளர்கள் சுரண்டல்: தேசிய நெடுஞ்சாலைப் பணி களை வெளிமாநில ஒப்பந்த தாரர்களே மேற்கொண்டு வரு கின்றனர். இதில் அசாம், பீகார், ஒடிசா, உத்தரகண்ட், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலி அடிப்படையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் கூலி குறித்தோ, ஒப்பந்ததாரர் யார் என்பது குறித்தோ சொல்ல மறுக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்தப் பணிகளின்போது ஏற்பட்ட விபத்துகளில் 4 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரி ழந்துள்ளனர். பாலத்தின் மீதும் ஆபத்தான உயரங்களிலும் நின்று வேலை செய்யும் தொழி லாளர்களுக்கு எவ்வித பாது காப்பு உபகரணங்களும் வழங்கப்படுவ தில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமை கூட தேன்கனிக்கோட்டை சாலையில் மத்திகிரி கூட்டு ரோடு மற்றும் முதுகானப்புள்ளி அருகே நடைபெற்று வரும் பாலப்பணி களில், தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி பக்க வாட்டில் நின்று வேலை செய்து வருகின்றனர். வடமாநிலங்க ளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தத் தொழிலாளர்க ளுக்கு அடிமாட்டு கூலி வழங்கப்படு வதோடு, தங்குவதற்குச் சரியான வசதிகள் இன்றி 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுவதாகத் தெரிய வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் உடனடியாகத் தலையிட்டு, தொழிலாளர்களுக்குக் கட்டாயம் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், தங்குவதற்குப் போதிய வசதி மற்றும் சட்டப்படி யான குறைந்தபட்ச கூலி, வேலை நேர முறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனச் சிஐடியு மாவட்டக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
