tamilnadu

img

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் புதிய பாடங்கள் சேர்ப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பொறியியல் படிப்புகளில் ஏஐ சார்ந்து புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இளங்கலைப் பொறியியல் பாடத்திட்டத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தொழில்துறை சார்ந்த பாடங்கள், ஏஐ, தரவு அறிவியல், மிஷின் லேர்னிங், ரி-இன்ஜினியரின் ஃபார் இன்னோவேஷன், தயாரிப்பு மேம்பாடு, காலநிலை மாற்றம், வாழ்க்கைத் திறன்கள், தொழில்துறை தரநிலைகள், உடற்கல்வி படிப்புகள் உள்ளிட்ட பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த புதிய பாடத்திட்டம் மூலம், வேலைவாய்ப்பு மற்றும் மேற்படிப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.