games

img

ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவிப்பு!

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியன் பிரிமியர் லீக் (IPL) போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்,
“எனது IPL கிரிக்கெட் வாழ்க்கை இன்று நிறைவுக்கு வருகிறது. ஆனால், பல்வேறு உலக லீக்குகளில் விளையாடி விளையாட்டை மேலும் ஆராயும் என் புதிய பயணம் இன்றே தொடங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 17 ஆண்டுகளாக IPL போட்டிகளில் விளையாடிய அஸ்வின், மொத்தம் 221 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை கைப்பற்றி, அதிக விக்கெட் எடுத்த முன்னணி ஐந்து வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவர் IPL-இல் தனது பயணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் துவங்கி, அதே அணியுடனே முடித்தார்.
ஏற்கனவே 2024 டிசம்பரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த அஸ்வின், IPL-இலும் ஓய்வு பெற்றிருப்பதால், உலகளாவிய பிற லீக்குகளில் விளையாடவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்