சென்னை,டிச.5- திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்பட வுள்ள மருத்துவக்கல்லூரி களுக்கு தலா ரூ.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு 9 புதிய மருத்துவக் கல்லூரி களுடனான மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ராமநாத புரம், திருப்பூர், நாமக்கல், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவமனைகள் அமைக்க தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக, மேலும் 3 இடங்களில் அமைக்க ப்பட உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகையில் புதிதாக கட்டப்பட வுள்ள மருத்துவமனைகளுக்கு ஆரம்பக்கட்ட பணிகளுக்கு தலா ரூ.70 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.