tamilnadu

img

திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும்.... கே.பாலகிருஷ்ணன் தகவல்.... .

சென்னை:
திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும். நல்ல முடிவு ஏற்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடுகுறித்து திமுக பேச்சுவார்த்தைக் குழுவுடன், சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், பி.சம்பத் ஆகியோர் அறிவாலயத்தில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிஎண்ணிக்கையை பேச்சுவார்த்தைக் குழு தெரிவித்தது. அது எங்களுக்கு போதுமானதல்ல என்று வேறு ஒருஎண்ணிக்கையை கூறினோம். இருப்பினும், மாநிலச் செயற்குழுவில் கலந்து பேசி தகவல் கூறுவதாக அவர்களிடம் தெரிவித்தோம். அவர்களும், திமுக தலைவரிடம் கலந்து பேசி தகவல் தெரிவிப்பதாகக் கூறினார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பாலகிருஷ்ணன், “தொகுதிபங்கீடு என்பது இரண்டு கட்சிகளும் இணைந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். நல்ல டிவு வரும் என்றுஎதிர்பார்க்கிறோம். வந்தால் நல்லது.நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்”என்றார்.அதிமுக-பாஜக அணி இரட்டை என்ஜின் பொருத்திய கூட்டணி என்கிறார்கள். அந்த அணியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு “அது காயலாங்கடை இன்ஜின்.அதெல்லாம் கழன்று போனது. ஒன்றும்ஓடாது. அக்குவேறு ஆணிவேறாக கழன்று கிடக்கிறது” என்றார்.

எடுபடாத அணி
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் செயற்குழு கூட்டம்நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தேர்தல்தயாரிப்புப் பணிகள் குறித்து செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. நாளை (ஞாயிறு)நடைபெறும் மாநிலக் குழுவிலும் விவாதிக்கப்படும். தொகுதி பங்கீடு குறித்து இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடக்கும்; நல்ல முடிவு ஏற்படும்என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளிக்கையில், “ஏற்கெனவே சொன்னதை விட தொகுதி எண்ணிக்கையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பேச்சுவார்த்தையின் போது பிற கட்சிகளோடு ஒப்பிட்டு ஒருபோதும் தொகுதியை கேட்பதில்லை. எங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்கிறோம். பேச்சுவார்த்தை நடத்தும் போது காலதாமதம் ஆகத்தான் செய்யும். எந்த நெருக்கடியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை. ஊடகங்களில் வருவதுபோல் அமித்ஷா மிரட்டி தொகுதிகளை வாங்கியுள்ளார். அது எடுபடாத கூட்டணி” என்றார்.