tamilnadu

img

மாணவர்களை பலிவாங்கும் நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்... மாணவர் சங்கம் வலியுறுத்தல்...

சென்னை:
தமிழக மாணவர்களை தொடர்ந்து பலிவாங்கி வரும் நீட் தேர்வை இரத்து செய்யஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:நீட் தேர்வு அநீதியால் தமிழகத்தில் மாணவர் மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூரை சார்ந்த தனுஷ் என்ற மாணவனும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சார்ந்த கனிமொழிஎன்ற மாணவியும் தற்போது பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை நீட் தேர்வால் இருபது மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசாங்கம் நீட் தேர்வை ரத்து செய்ய ஓய்வுபெற்றநீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுஅமைத்து பொதுமக்களிடம் கருத்து கேட்டது84 ஆயிரம் மக்களிடம் கருத்து கேட்டதில்  சுமார்70 விழுக்காடு மக்கள் நீட் தேர்வு வேண்டாமென உறுதியுடன் கூறியுள்ளனர். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலும் தமிழகஅரசு நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு நீட்டிற்கு எதிரான உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கடந்த அதிமுக அரசை போன்று சட்டம் நிறைவேற்றுவதோடு நில்லாமல் வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழகஅரசும் மாணவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவேண்டும். பள்ளிகளில் மன உறுதிக்கான வகுப்புகளை எடுக்க வேண்டும். இது அரசின் தவறான முறையற்ற தேர்வு நடவடிக்கை என்ற வகையில் இறந்த மாணவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஒன்றிய அரசுநீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.