tamilnadu

img

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கு:   காவல் நிலையத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை:
தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்வி சேகர் விசாரணைக்காக மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய அலுவலகத்தில் ஆஜரானார்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பி வைத்தார்.அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனல்  ஒன்றில் இந்திய தேசியக்கொடியை  அவமதித்து வீடியோ பதிவு  ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர்  கிரைம் போலீசார் ய்தனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.இந்நிலையில் நடிகர் எஸ்வி சேகர் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலைய அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.