மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி மீது கொலைவெறி தாக்கு!
மலைவாழ் மக்கள் சங்கத்தில் கடம்பத்தூர் ஒன்றிய துணைச் செய லாளரை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் மீது பாலியல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலி யுறுத்தியுள்ளார். திருவள்ளூர் வட்டம், திருமேனி குப்பத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கடம்பத்தூர் ஒன்றிய துணைச் செயலாளராக எம். தமிழரசி (க/பெ முரளி) மக்கள் பணிசெய்துவருகிறார். அங்கு வாழும் இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா, சாதி சான்றிதழ் போன்ற அடிப்படை தேவைகளை போராடி பெற்றுக் கொடுத்துள்ளார். மலை வாழ் மக்கள் சங்கத்தின் முன்னணி ஊழியராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை (மார்ச் 2) இரவு 10.30 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (24), என்பவர் மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகியின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். காமவெறி பிடித்த சுரேஷ், தமிழரசி யிடம் உன் மகளை எனக்கு திரு மணம் செய்து கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயந்து ஓடியஅவரை துரத்திச்சென்று எட்டி உதைத்ததில் கீழே விழுந்துள்ளார். பின்னர் கத்தி யால் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளார். மேலும் இடுப்பில் கத்தியால் வெட்டப்பட்டதால்,விலா எலும்பும் உடைந்துள்ளது. வலி தாங்கமுடியாமல் கூச்சலிட்டபோது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து திருபெருமந்தூர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இருளர் இன பெண்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. நுண் நிதி நிறு வனங்களில் கடன் பெற்ற குடும்பங் கள் ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். இருளர் இன மக்களின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும், காவல்துறை யினர் குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு வலியுறுத்தியுள்ளார். தலைவர்கள் ஆறுதல் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொடுங்காயத்துடன் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மலைவாழ் மக்கள் சங்கத்தின் நிர்வாகி தமிழ ரசியை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, சிபிஎம் செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், தாஸ், மாதர் சங்கத்தின் மாவட்ட செய லாளர் ஜெயந்தி, வாலிபர் சங்கம் மாவட்ட தலைவர் சதீஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் கூறினார்.