கந்தர்வகோட்டை தொகுதியில் எம்.பி., எம்எல்ஏ நிதியில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு
புதுக்கோட்டை, மார்ச் 17- புதுக்கோட்டை மாவ ட்டம் கந்தர்வ கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ, சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டி முடிக்கப்பட்ட கட்டிட ங்களை சனிக்கிழமை யன்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டன. கந்தர்வகோட்டை ஒன்றியம் பிசானத்தூர், கறம்பக்குடி ஒன்றியம் பத்துத்தாக்கு, ரெகுநாத புரம் புதுவிடுதி, கீரனூர் பேரூராட்சி ஈகை நகர் ஆகிய இடங்களில் அங்கன்வாடி கட்டிடங்களும், கறம்பக்குடி ஒன்றியம் கருப்பட்டிப்பட்டி, குன்றாண்டார் கோவில் ஒன்றியம் தெம்மாவூர், தெம்மாவூர் காரடிவயல், கீழையூர் நாச்சியார்பட்டி, விசலூர் சிவகாமிபுரம் ஆகிய இடங்களில் கலையரங்கம், குன்றாண்டா ர்கோவில் ஒன்றியம் பள்ளத்துப்பட்டி ஓவிகே நகரில் நூலகம், கீரனூர் பேரூராட்சி கிருஷ்ணத்து ஊரணியில் பேவர் பிளாக் சாலை, கந்தர்வகோட்டை உப்பிலியக்குடி கன்னியா பட்டியில் உணவுக்கூடம் ஆகிய கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. கட்டிடங்களை திருச்சி ராப்பள்ளி தொகுதி மக்களவை உறுப்பினர் துரை.வைகோ, கந்தர்வ கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் டி. செல்வம், முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் கே.ஆர்.என். போஸ், திமுக ஒன்றியச் செயலாளர்கள் என். சேட், சி. சண்முகம், ஓ.எஸ். வெங்கடாஜலம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றியச் செயலாளர் எஸ் .கலைச்செல்வன், மதிமுக ஒன்றியச் செயலாளர் மதியழகன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
