சென்னை
தமிழகத்தில் கடந்த ஒருவார கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியான சென்னையில் கொரோனா பரவல் தாறுமாறாக உள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான கோயம்பேடு தமிழ்நாட்டின் கொரோனா மையமாக மாறியுள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத இன்று ஒரேநாளில் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 203 பேரும், விழுப்புரத்தில் 33 பேரும், கடலூரில் 9 பேரும், கோவையில் 4 பேரும், மதுரை, அரியலூர், தென்காசி ஆகிய பகுதிகளில் 2 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 3,023 ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ள நிலையில், 38 பேர் கொரோனாவை வென்று வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,379 ஆக உள்ளது. இன்று கொரோனா பரவல் அதிகரிப்புக்கு சென்னை கோயம்பேடு சந்தை முக்கிய பங்கு வகிக்கத்துள்ளது.