திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா 10ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர், ஜன. 19- திருப்பத்தூர் மாவட்டம், பெரிய கசி நாயக்கன்பட்டி கிராமத்தில் 43 ஆம் ஆண்டு மாபெரும் எருதுவிடும் விழா திங்க ளன்று பெரிய கசிநாயக்கன்பட்டி ஊர் கவுண்டர் பூபதி கந்திலி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கே.எஸ். ஏ.மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கிருஷ்ணகிரி ஆகிய பகுதியில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் ஓடிய காளைக்கு முதல் பரிசு ரூ. 77,777, இரண்டாம் பரிசு ரூ 66,666 என மொத்தம் 72 பரிசுகள் வழங்க உள்ளனர். நிகழ்ச்சியில் எருது விடும் விழா குழுவினர் சக்கரவர்த்தி, ஆறுமுகம், கோவிந்தராஜ், நடராஜன், குமா,ர் சுந்தர மூர்த்தி, தாமரைச்செல்வன், கார்த்திகேயன், செல்லபாண்டியன், செல்வகுமார், லட்சுமி, பூபதி, மகாலட்சுமி, சுரேஷ், இசை வாணி, கார்த்திகேயன் உள்ளிட்ட விழா குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் எருது விடும் விழாவிற்கு திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவத்துறையினர் தீயணைப்பு துறை யினர், கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவத்துறையினர் மற்றும் சம்பந்தப் பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
