tamilnadu

img

மோடி பதவியேற்பு விழா

சென்னை:
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினி காந்துக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹா சனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றி ருந்த நதிகள் இணைப்பு என்ற வாக்குறுதியை ரஜினி காந்த் பாராட்டி இருந்தார். அதேபோல் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக நரே ந்திரமோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருந்தார்.

இந்நிலையில் வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடை பெறும் விழாவில், பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், இதில் பங்கேற்குமாறு ரஜினி காந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.