tamilnadu

img

தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு கேரளம், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று(டிச.27) முதல் வரும் ஜனவரி 2அம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.