india

img

அடுத்த 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்  

வட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

வளிமண்டல சுழற்சி காரணமாக வடமாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் லடாக்கில் கடும் பனியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்.  அதனைதொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும்.  

ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.