tamilnadu

img

கல்வெட்டு ஆய்வாளர்கள் நியமனம் சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில்

கல்வெட்டு ஆய்வாளர்கள் நியமனம் சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு கலாச்சாரத்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் தனது முகநூலில் கூறியிருப்பதாவது

ஜூன் 13 அன்று எல்லா மொழிகளிலும் உள்ள கல்வெட்டுகளின் உள்ளடக்கத்தை வெளிக் கொணர்கிற ஆய்வாளர்களை (Epigraphist) புதிய பணியிடங்களை உருவாக்கி நியமிக்க வேண்டுமென்று ஒன்றிய கலாச்சார அமைச்சர் பிரகலாத் சிங் படேல் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

இன்று ஒன்றிய கலாச்சார அமைச்சரிடம் இருந்து பதில் வந்துள்ளது. அதில்

கல்வெட்டு ஆய்வாளர் நியமனம் பற்றிய எனது கடிதம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றும் அதை உரிய அமைச்சக அதிகாரிகளின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் பரிசீலனை முடியட்டும். கல்வெட்டு ஆய்வாளர்கள் நியமனம் பெற புதிய பணியிடங்கள் உருவாக்கப்படட்டும்.

#கல்வெட்டு