மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
செப். 4ஆம் தேதி எதிர்பார்க்கப்பட்ட பிறை தெரியாததால், செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசிடம் தலைமை காஜி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசு அலுவலகங்களுக்கு செப். 17ஆம் தேதி பொது விடுமுறை அளிப்பதாக தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் அரசாணையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மறுஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.