tamilnadu

img

எம்ஜிஆர் பல்கலைகழக முதுநிலை தேர்வுகள் ரத்து!

சென்னை,டிசம்பர்.07- எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக முதுநிலை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழக மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வுகள் டிசம்பர்.09 நடக்கவிருந்த நிலையில் அதனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க அவகாசம் கோரி மருத்துவ மாணவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தற்போது தேர்வினை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.