சென்னை. ஜன.8- கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்க ளில் புதிதாக மருத்துவக் கல்லூரி களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3,600 கோடி மதிப் பீட்டில் தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளது. தற்போது கடலூர் கள்ளக்குறிச்சி அரிய லூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்க ளில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முதல் கட்ட அனுமதி பெறப் பட்டுள்ளது. விரைவில் இந்த மருத்துவக் கல் லூரிகளுக்கான உரிய அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவோம் என்றார்.