tamilnadu

img

மே 13 ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மே 13 ஆட்சியர் அலுவலகம் முற்றுகை 

போராட்டத்தில் குடியிருப்போர் சங்கம் பங்கேற்கிறது

கடலூர், மே 10- கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்திற்கு தலைவர் பாலு.பச்சைப்பன் தலைமை தாங்கினார்.  சிறப்புத் தலைவர் எம்.மருதவாணன், துணைத் தலைவர் இளங்கோவன், ரங்கநாதன், ராஜேந்திரன், நடராஜன், ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பி.வெங்கடேசன் செயலாளர் அறிக்கை சமர்பித்து பேசினார். எஸ்.கே.தேவநாதன் வர வேற்றார்.பொருளாளர் வெங்கட்ரமணி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார். துணை தலைவர் சண்முகம் நன்றி கூறினார். இந்த கூட்டத்தில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த உள்ள தமிழக அரசு அதை தனியாருக்கு விடாமல் அந்த திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும். புதிய பேருந்து நிலையம் எம்.புதூரில் அமையும் என்ற மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்வதற்காக மே 13 அன்று நடைபெறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அனைத்து கட்சிகளுடன் பொதுநல அமைப்புகளுடன் அனைத்து குடியிருப்போர் சங்கமும் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மஞ்சக்குப்பம் மைதானத்தை மக்கள் கூடும் இடமாக மாற்றுவதற்கு தமிழக முதல் ரூ.35 கோடி நிதி  அறிவித்துள்ள நிலை யில், அதன் அழகு கெடாமல் நான்கு புறமும் மதில் சுவருடன் நடைபாதையுடன் இருக்கிற மரங்களை பாதுகாத்து புதிய மரங்களை நட்டு மக்கள் பயன்பாட்டுக்கு மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். மைதானத்திற்கு அருகில் உள்ள பாபு கலையரங்கத்தை புதுப்பித்து  மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். முதியவர்கள் மாணவர்கள் பெண்கள் நடைபயிற்சி செய்ய முதல்வரால் அறிவிக்கப்பட்டு  மாவட்ட ஆட்சியரால் துவக்கி வைக்கப்பட்ட பாரதி சாலை முதல் கடற்கரை வரையிலான நடைபாதையை அமைக்க உடனடியாக மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.