பெஞ்சால் புயல் மழையின் போது தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளம் கடலூர் மாநகரம், குறிஞ்சிநகர், கடலூர் ஒன்றியம் உப்பளவாடி பூந்தென்றல் நகர் பகுதியில் புகுந்தது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் சேறும் சகதியுமாக மாறின. பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கின. இந்நிலையில் வெள்ளநீர், சேறு, குப்பைகளை அகற்றும் பணியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தோழர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொருளாளர் ஜி.பிரமிளா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், ஜெ.ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் ஆ. அமர்நாத், மாதர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வி.மல்லிகா, பி.மாதவி, எஸ்.ரேவதி, வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.வினோத்குமார், சதீஸ்குமார், டி.கிருஷ்ணன், எம்.கலைவாணன், வழக்கறிஞர் சுரேஷ்குமார், ஆசிரியர் வத்சலா, மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சவுமியா, பூபதி, சுகினா பாரதி, திருமுருகன், அய்யாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.