சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.மு.க.ஸ்டாலின்: “இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும். எனவே உடனடியாக அமைச் சரவையைக் கூட்டி வரவேற்று கொள்கை முடிவாக அறிவிப்பதுடன் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக “கேவியட்” மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்”.துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், “அரசு ஏற்கெனவே அறிவித்தபடி பல கோடி மக்களின் எண் ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்ப்பு அமைந் துள்ளது. தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்”.
மக்களின் வெற்றி...
வைகோ: “ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி. மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 13 உயிர்களின் ரத்தத்திற்கு கிடைத்த நீதி. 26 ஆண்டுகள் நீதிமன்றத்திலும், மக்களுக்காகவும் போராடியத்திற்கு கிடைத்த வெற்றி.திருமாவளவன்: “ ஸ்டெர் லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த ஆலை மீதான தடை தொடரும் என்றும் அறிவித்திருப்பதை மனதார வரவேற்கிறோம்.உச்ச நீதிமன்றத்திலும் பொருத்தமான வழக்கறிஞர்களை நியமித்து இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள நீதியை தமிழக அரசு தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும்.
திமுக எம்.பி கனிமொழி: “நிச்சயமாக வரவேற்கத்தகுந்த தீர்ப்பு. மக்கள் உயிரை கொடுத்து பெற்றிருக்கக்கூடிய வெற்றி. அரசு கொள்கை முடிவு எடுத்து தடுக்க வேண்டும். கொள்கை முடிவு எடுத்தால் இன்னும் வலு சேர்க்கும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்கள்.