பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் சில நேரங்களில் விபத்துக்களை சந்தித்து மாணவர்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிடுகின்றன. அதற்கு பெரும்பாலும் வாகனங்கள் முறையான பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பெரும்பாலும் பள்ளி நிர்வாகமே பேருந்தில் அழைத்துச்சென்று மீண்டும் வீடுகளுக்கு கொண்டுசென்று விடுகிறது. இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும், மோட்டார் வாகன ஆய்வாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும். மேலும் வாகனத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில் தலா ஒரு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.