அரிவாள் சுத்தியல் நட்சத்திரத்துடன் மஞ்சு விரட்டு
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆதமங்கலம் புதூரில் காளை மாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் வில்வாரணி கிளையின் தோழர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கலசப்பாக்கம் பகுதி பொறுப்பாளர்கள் தங்கள் வளர்க்கும் காளைகளை சிவப்பு சால்வைகளால் அலங்காரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் பொறித்த சின்னத்தை நெற்றியில் திலகமாக இட்டு மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ள வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் முனியப்பன், பரசுராமன், அன்பழகன், வெங்கடேசன், விக்னேஷ், நித்திஷ், சங்கர் மற்றும் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.
