tamilnadu

img

சு.வெங்கடேசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பட்டும் மதுரை தொழிலாளி வர்க்கம்

மதுரை, ஏப்.6-நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த துடிக்கும் பாஜகவையும் அதனோடு கூட்டணிவைத்துள்ளஅதிமுக-வையும் வாக்காளர்கள்தோற்கடித்து தமிழக மக்கள்ஒற்றுமையின் சின்னங்கள் என்பதைநிரூபிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மேற்குசட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளாங் குடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட் டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது:-மோடி அரசு பொய்யையே மூலதனமாகக் கொண்டு ஆட்சி செய்கிறது. தேர்தல் நெருங்கிய தருணத்தில் மோடி விமானத்தில் பறந்து பறந்து தமிழகத்திற்கு வந்தார். இங்கு வந்தும் அவர் பொய்யையே பேசினார்.மோடி ஆட்சியில் மக்களின் வாழ்க்கை,கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வளர்ச்சி ஆகியவை கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் அவற்றை குறைக்க மறுத்து நாள்தோறும்விலையேற்றி மக்களை கொள்ளையடித்தது. கேஸ் விலை உயர்வால் ஏழை-எளிய மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். வருடத்திற்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலை வழங்குவேன் என்றார். ஆனால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.நாட்டின் பொருளாதாரம், அயல் நாட்டுக் கொள்கை, மக்களின் வாழ்க்கைஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும்.கடந்த ஐந்தாண்டு காலத்தில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளனர்.  சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎப்,ஐஎன்டியுசி உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் 2015, 2016-ஆம் ஆண்டுகளில் பிரம்மாண்டமான போராட்டங்களை நடத்தின. கடைசியாக 2019-ஆம் ஆண்டு ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் சிஐடியு வேலை நிறுத்தத்தை நடத்தியது. இதில்20 கோடி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். 


விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற் கொலை செய்துகொண்டனர்.மக்களின் நலன்களுக்கு விரோதமான அரசாகத் தான் மோடி அரசு செயல்பட்டு வந்துள்ளது. மக்களவை துணைசபாநாயகரான அதிமுகவைச் சேர்ந்ததம்பிதுரை, தமிழகத்திற்கு மோடி என்ன செய்துள்ளார் எனக் கேள்வியெழுப்பினார். அவரது கேள்விக்கு இதுவரை பதிலில்லை. அம்பேத்கர் உருவாக்கித் தந்த சட்டங்களை குழிதோண்டி புதைக்க பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சி செய்கிறது. செல்லாத நோட்டு அறிவிப்பால் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். தாங்கள் சேமித்து வைத்த பணத்தை வங்கிகளில் எடுக்கச் சென்றவர்கள் பலியான கொடுமையும் நடைபெற்றது.50 நாட்களில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தண்டனை கொடுங்கள் என்றார் மோடி. ஆனால், கொடுத்த வாக்குறுதி எதையும் அவர் நிறைவேற்றவில்லை.சிறு-குறு தொழில்களைப் பற்றியோ, ஏழை-எளிய மக்கள் குறித்தோ அவர்கள் கவலைப்படவில்லை. அம்பானி, அதானி,டாடா. பிர்லா ஆகியோரைப் பற்றியே கவலை கொண்டனர். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் புதிய தொழிற் சாலைகளைத் திறக்க முன்வரவில்லை. இங்குள்ள நிறுவனங்களை கபளீகரம் செய்யவே முயற்சி மேற்கொள்கின்றன.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கே.டி.கே.தங்கமணி, பி.ராமமூர்த்தி, பொ.மோகன் ஆகியோர் மதுரை மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியுள் ளார்கள். அவர்களது வரிசையில் தற்போது மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். விவசாயிகளின் குரல், தொழிலாளர்களின் குரல், மதுரையின் குரல், தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். தமிழக மக்கள் ஒற்றுமையின் சின்னங்கள் என்பதை நிரூபியுங்கள். நம்முடைய வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பதையும் உறுதிப் படுத்துங்கள்.இவ்வாறு ஏ.கே.பத்மநாபன் பேசினார்.


முன்னதாக தேர்தல் பணிமனையையும் அவர் திறந்துவைத்தார். இந்தக் கூட்டத்திற்கு திமுக வட்டச் செயலாளர் தேவராஜ் தலைமை வகித்தார், பாலகிருஷ்ணன் (காங்கிரஸ்), விஜயலெட்சுமி, திருப்பதி (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்,மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.சுப்பையா, முருகேசன் மற்றும் மனோகரன், சௌந்தர் உட்பட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்கள் கலந்துகொண்டனர்.