சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்.இரு பாடப் பிரிவுகளை ரத்து செய்தது முறையற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக். பயோடெக்னாலாஜி, எம்.டெக். கம்ப்யூட்டேசனல் டெக்னாலஜி ஆகிய இரு பாடப் பிரிவுகளுக்குஇந்தாண்டு மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதால் சம்பந்தப்பட்ட வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களது கல்வி பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. மத்திய அரசின் 49.5 சதமானஇட ஒதுக்கீட்டின்படி அல்லது தமிழகஅரசின் 69 சதமான இடஒதுக்கீட்டின் படி மாணவர்களை சேர்ப்பதா என்றகுழப்பத்தின் காரணமாக மேற்கண்டஇரு பாடப்பிரிவுகள் ரத்து செய்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது முறையற்றது, வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.
இந்த படிப்பிற்கு சேர்க்கை நடத்திட வெளியிடப்பட்ட அறிக்கை விளம்பரம் உள்ளிட்ட அனைத்திலும் தேர்ச்சி பெற்றவர்களை எந்தபல்கலைக்கழகம் சேர்த்துக் கொள்கிற தோ, அந்த பல்கலைக்கழகம் தனதுவிதிமுறைகளின்படி சேர்த்துக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள் ளது. இதன்படி, அண்ணா பல்கலைக் கழகம் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும்பல்கலைக்கழகம் என்பதால் தமிழக அரசு பின்பற்றும் 69 சதமான இடஒதுக்கீட்டினை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்துவதே முறையானதாகும். இப்பிரிவுகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது என்ற காரணம் காட்டி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமலாக்க வேண்டுமென மத்தியஅரசு வற்புறுத்துவது ஏற்க முடியாத ஒன்றாகும்.எனவே, மேற்கண்ட இரு பிரிவுகளுக்க்கும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு சட்டத்தின்படி 69 சதமான இடஒதுக்கீட்டினை வழங்கி மாணவர் சேர்க்கை மேற்கொண்டு தொடர்ந்து அம்மாணவர்கள் கல்வி கற்க அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு மாணவர்களின் கல்வி பாதிக்காமல் தொடர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.