tamilnadu

img

நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் - நடிகர் சூர்யா 

நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்கியது என திரைக்கலைஞர் நடிகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,

நீர் தேர்வு பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குகிறது.மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல அவலம் எதுவுமில்லை, கொரோனா பேரிடர் காலத்திலும் கூட தேர்வு மூலம் தகுதியை நிரூபிக்க நிர்பந்திப்பது வேதனை அளிக்கிறது.அரசு ஏற்றத்தாழ்வு உருவாக்குகிற கல்வி முறை சட்டமாக கொண்டு வருகிறது. அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். 

கொரோனா அச்சாத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரஷ்சிங்  மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் தேர்வு எழுத உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் மரண வாக்கு மூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர் அனல் பறக்க விவாதிப்பார்கள் .

நீட் போன்ற மனுநீதி மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களைபறிக்கிறது. அநீதியான தேர்வுகளை வாரிக்கொடுத்து விட்டு, வாயிலும் வயிற்றிலும் அடிக்கிற வாழ்நாள் தண்டனையாக பெற்றோர்களுக்கு மாறுகிறது.

நீட் மூன்று மாணவர்களையும் கொன்று இருக்கிறது . இன்று நடந்ததோ நேற்று நடந்ததோ என்பதல்ல பிரச்சனை. இனி நாளையும் நடக்கும்.நாம் விழிப்புடன் இல்லாமல் போனால் மீண்டும் நடந்துகொண்டே இருக்கும்.அப்பாடி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கக் கூடாது. மாணவர்களின் மறுத்து கனவில் தீ வைக்கிற நீர் தேர்வுக்கு எதிராக ஒரு சமூகமாக  நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.