tamilnadu

img

‘சுதந்திரம் காப்போம்: மதவெறி மாய்ப்போம்’ ஆக.15 அன்று இணையவழி கருத்தரங்கம்.... தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவிப்பு

சென்னை:
மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பு, மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி, சுதந்திர தினமான ஆக.15 அன்று ‘சுதந்திரம் காப் போம், மதவெறி மாய்ப்போம்’ என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நடத்துவதாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா.அருணன், க.உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில செயற்பாட்டுகுழு கூட்டம் வியாழனன்று (ஆக.6) இணையதளம் வழியாக நடைபெற்றது. கூட்டத்திற்கு பேராயர் பிஷப் தேவசகாயம் தலைமை வகித்தார். ஜவாஹிருல்லா, பி. சம்பத், தாகூத் மியாகான், உமர் பரூக், சிக்கந்தர் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.கொரோனா கால நெருக் கடியை சாதகமாக்கி, ஆட்சியதிகாரம், பணபலம் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி இந்துத்துவ அமைப்புக்கள் நாட்டை பிளவுபடுத்தும், மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், மதநல்லிணக்கத்தை நிலைநிறுத்தவும் மக்களிடையே தீவிர விழிப்புணர்வு பிரச் சாரத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. அதன் ஒருபகுதியாக சுதந்திர தினத்தன்று ‘சுதந்திரம் காப்போம், மதவெறி மாய்ப் போம்’ எனும் தலைப்பில் மாநில அளவிலான இணைய வழி கருத் தரங்கம் நடைபெறுகிறது.தமிழக சிறைகளில் பல்லாண்டுகளாக உள்ள அரசியல் அமைப்புகள் மற்றும் சிறுபான் மையின தலைவர்கள் மற்றும் தொண்டர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி செப்டம்பர் முதல் வாரத்தில் இணைய வழி கருத்தரங்கம் நடைபெறும்.

அக்.2 மகாத்மா காந்தி பிறந்த தினத்தை ‘அரசியல் சாசனத்தை பாதுகாப்போம், மதசார்பற்ற குடியரசை காத்து நிற்போம்” என்ற வகையில் பல்வேறு துறை அறிஞர்கள், கருத்தாளர்கள் பங்குபெறும் மாநில மாநாடு நடத்தப் படும்.மக்கள் ஒற்றுமையை பாதுகாக்கவும், மதநல்லிணக்கத்தை பேணவும் மக்கள் ஒற்றுமை மேடை மேற்கொள்ளும் அனைத்துவித கருத்து பிரச்சார நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவு தரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.