tamilnadu

img

அமெ-இஸ்ரேலுக்கு அடிபணிந்து செயல்படும் பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம் சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

அமெ-இஸ்ரேலுக்கு அடிபணிந்து செயல்படும் பாஜக அரசுக்கு பாடம் புகட்டுவோம்  சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

சென்னை, மார்ச் 10 - அமெரிக்கா, இஸ்ரே லுக்கு அடிபணிந்து செயல் படும் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டியது மக்களின் கடமை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அகில இந்திய கட்டுப் பாட்டுக்கு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறி னார். கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதிக் குழு சார்பில் செவ்வாயன்று (மார்ச் 10) ரிச்சி தெரு கடை வீதியில் தேர்தல் நிதி உண்டி வசூல் நடைபெற்றது. இதனை அகில இந்திய கட்டு ப்பாட்டுக் குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து நிதி வசூ லில் ஈடுபட்டார். மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி, மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.அருள்குமார், பழனி, சீனிவாசன், பகுதிக் குழு உறுப்பினர்கள் நந்த குமார், அன்பழகன், சுரேஷ், ராஜேந்திரன், உஷா, அருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய ஜி.ராமகி ருஷ்ணன், தமிழ்நாடு முழுவதும் சிபிஎம்  செயல் வீரர்கள் மக்களைச் சந்தித்து நிதி வசூல் செய்கிறார்கள். எந்த மக்களின் பிரச்சனைக்கு அர்ப்பணிப்போடு போராடா டுகிறோதோ, வாதாடு கிறதோ, அந்த மக்களைச் சந்தித்து நிதி வசூல் செய்கி றோம். நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தல் மதச்சார் பின்மையா, மதவெறியா- ஜனநாயகமா, சர்வாதி காரமா என்று நடக்கக்கூடிய தேர்தலில், குறிப்பாக திமுக தலைமையில் சிபிஎம்,சிபிஐ , விசிக,காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் சேர்ந்து மகத்தான தேர்தல் பணியை துவங்க உள்ளோம். சமீபகாலமாக ஒன்றிய அரசு மாநில உரிமைகளைப் பறிக்கிறது. பாஜக அல்லாத மாநில அரசை சீர்குலைக்கக் கூடிய நடவடிக்கைக்கு எதி ராக மக்கள் மத்தியில் மிகப் பெரிய எழுச்சி உள்ளது. சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8  பெண்களுக்குப் பரி சளிப்பது போன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தி உள்ளனர். இது போன்ற மக்களின் உரிமை, வாழ்வாதாரம் பறிக்கும் ஒன்றிய அரக்கு பாடம் புகட்டும் வகையில் தமிழ் நாட்டு மக்கள் வாக்களிக்க உள்ளனர். அந்தப் பணியை மார்க்சிஸ்ட்கட்சி செய்கிறது. சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரே லுக்குப் சென்று அந்நாட்டு அதிபரைச் சந்தித்த மறு நாளே இஸ்ரேல், அமெ ரிக்கா இணைந்து ஈரான் மீது  போர் தொடுத்தனர். குறிப் பாக ஈரானில் ஆட்சி மாற்ற த்தை உருவாக்க வேண்டும் என்று டிரம்ப், இஸ்ரேல் அதிபர் முயற்சி எடுக்கின் றனர். யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக்கூடாது என்று அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஈரானின் இறை யாண்மையை பறிக்கும் வகையில் அமெரிக்காவின் நடவடிக்கை எடுக்கிறது. இந்திய அரசின் அழைப்பை ஏற்று  விருந்தாளிகளாக ஈரானிலிருந்து வந்த போர்க் கப்பலைக் அமெரிக்கா தாக்கியது. இதை பிரதமர் மோடி கண்டனம் கூடத் தெரி விக்கவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலால் மேற்காசிய நாடுகள் முழுவதும் தங்கள் ஆதிக்கத்திற்கு கொண்டு வரக்கூடிய மோசமான நட வடிக்கையை எடுத்துள் ளனர். உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறைக்கு காரணம் அமெரிக்க ஏகாதி பத்தியமும், இஸ்ரேலும் தான். ஒரு வார்த்தை கூடக் கண்டிக்கத் தைரியம்  இல்லாத மோடி அரசாங்கம், திடீர்னு மார்ச் 8 ஆம் தேதி சமையல் எரிவாயு விலை உயர்த்தி உள்ளது. அமெரி க்கா, இஸ்ரேலின் அடி பணிந்து செயல்படக்கூடிய ஒன்றிய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டியது மக்க ளுக்கு முன்னால் உள்ள மிக  முக்கியமான கடமை என்றார்.