அரிதான தோழர்களை உருவாக்குவோம்!
எஸ்.பக்தவச்சலு படத்திறப்பு நிகழ்வில் அ.சவுந்தரராசன் நெகிழ்ச்சி
அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா ளர் தோழர் எஸ்.பக்தவச்சலு படத்திறப்பு நிகழ்ச்சி புத னன்று (பிப்.25) வில்லி வாக்கம் நாதமுனி திரைய ரங்கம் அருகே நடைபெற் றது. உருவப்படத்தை திறந்து வைத்து, அவரது குடும்பத் திற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை வழங்கி சிஐ டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகை யில், “தனது பணிக்கு ஓய்வு கொடுத்த பக்தவச்சலு, பிற ருக்கு உதவி செய்ய ஓய்வு கொடுத்ததே இல்லை. பிறரிடம் இருந்து தனித்து தெரிவதுதான் வாழ்வின் வெற்றி. அவ்வாறு அவர் வாழ்ந்தார். இறுதி மூச்சு வரை தடுமாற்றம் இன்றி கொள்கை உறுதியோடு இருந்தார். தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியமான போராளியாக இருந்தார்” என்றார். “புகழ்வெளிச்சம், பாராட் டுக்களை விரும்பாதவராக இருந்தார். போக்குவரத்து தொழிற்சங்க வரலாற்றை தோழர் பக்தவச்சலுவை தவி ர்த்துவிட்டு எழுத முடியாது. இவரை போன்ற பல அரிதான தோழர்களை உரு வாக்குவோம் என்றும் அவர் நெகிழ்ச்சியோடு கூறினார். தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேள னத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேசு கையில், “இறுதி காலம் வரை உத்வேகத்தோடு சோர் வின்றி சங்கப் பணியாற்றி னார். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம்” என்றார். சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சி.முரளி கணேஷ் தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலா ளர்கள் சி.திருவேட்டை (மத்திய சென்னை), பா.பால கிருஷ்ணன் (தென்சென் னை), சங்கத்தின் தலைவர் ஆர்.துரை, பொதுச்செய லாளர் வி.தயானந்தம், துணைத்தலைவர் எம்.சந்திரன், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொருளா ளர் எஸ்.ஆதிமூலம் உள்ளிட் டோர் பேசினர். இணைச் செயலாளர் டி.ஏழுமலை நன்றி கூறினார்.