ஓசூரில் தொழிலாளர் துறை அலுவலகம் சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு கோரிக்கை
கிருஷ்ணகிரி,செப். 22- மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழிற் சாலைகள் நகரமான ஓசூரில் தொழிலாளர் துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்று சிஐடியு மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது. சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்ட 13வது மாநாடு ஓசூரில் தோழர் பொன்முடி நினைவரங்கில் மாவட்டத் தலைவர் வாசு தேவன் தலைமையில் நடை பெற்றது. துணைத் தலை வர் எஸ்.பீட்டர் சங்கக் கொடியை ஏற்றினார். துணைத் தலைவர் கருணாநிதி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைத் தலைவர் கே.கோவிந்தம்மாள் வர வேற்றார். மாநில துணைத் தலைவர் ஆர். சிங்கார வேலு துவக்க உரையாற்றி னார். மாவட்டச் செய லாளர் ஜி.ஸ்ரீதர் வேலை அறிக்கையும், பொரு ளாளர் ஜி.ஸ்ரீதரன் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். மாநிலச் செயலாளர் சி.நாகராஜன் நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைச் செய லாளர் ஸ்டாலின் ராஜா நன்றி கூறினார். நிர்வாகிகள் தேர்வு மாவட்டத் தலைவராக கே.கோவிந்தம்மாள், செயலாளராக என்.ஸ்ரீதர், பொருளாளராக ஜி.ஸ்ரீதரன் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் ஓசூர் மாநகர பாதாள சாக்கடை திட்டத்தை காலம் தாழ்த்தாமல் விரைந்து செய்து முடிக்க வேண்டும். ஓசூர் முழுவதும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். ஓசூர் கிருஷ்ணகிரி போக்கு வரத்து நெரிசல் கடுமை யாக இருப்பதால் ஓசூர் ஜோலார்பேட்டை ரயில் பாதை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓசூர் மாநகர் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவைக்கேற்ப ஆர்.ஓ. நிலையங்கள் அமைக்க வேண்டும். ஓசூர் தொழிலாளர் துறை நீதிமன்றத்திற்கு நிரந்தரமான நீதிபதியை நியமனம் செய்ய வேண்டும். ஓசூரில் கார்மென்ட்ஸ் டெக்ஸ்டைல் தொழிற் சாலைகளில் ஆயிரக்க ணக்கில் பெண்கள் பணி புரிவதால் அங்கு பெண்கள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும், குழந்தைகள் காப்பகம் அமைக்க வேண்டும், பெண் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஓசூரில் தொழிற்சாலை களில் வேலை முடியும் இரவு 12 மணிக்கு மேல் இரவு நேர பேருந்து விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக ரயில் நிலையம் முன்பு இருந்து புறப்பட்ட தொழிலாளர்க ளின் உரிமை பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாநாட்டு அரங்கை அடைந்தது.