tamilnadu

img

கல்வியில் முதன்மையாக இருக்கும் குமரி மாவட்டம் வாக்கு அளிப்பதிலும் முதன்மை வகிக்க வேண்டும் -ஆட்சியர்

கல்வியில் முதன்மையாக இருக்கும் குமரி மாவட்டம் வாக்கு அளிப்பதிலும் முதன்மை வகிக்க வேண்டும் -ஆட்சியர்

நாகர்கோவில் .மார்ச். 18 கன்னியாகுமரி மாவ ட்டம் கல்வியில் சிறந்த மாவ ட்டமாக இருப்பது போல் வாக்க ளிப்பதிலும் முதன்மை மாவ ட்டமாக திகழ வேண்டும் என முதல் வாக்காளர்களிடையே மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா கலந்துரை யாடுகையில் கூறினார். கன்னியாகுமரி மாவட் டத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்ட மன்ற பொதுத்தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்பது குறித்து, பல்வேறு தேர்தல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சிகள் நடை பெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்திற் குட்பட்ட அரசு, அரசு உதவிபெ றும் மற்றும் தனியார் கலை  மற்றும் பொறியியல் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர் கள் மற்றும் முதல் வாக்காளர்க ளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலு வலர் மற்றும் மாவட்ட ஆட்சி யர் ஆர் .அழகுமீனா தலை மையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஆர்.ஸ்டாலின் முன்னிலையில் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முதல் வாக்காளர்க ளிடையே பேசுகையில்- இந்திய தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டிற்குட்பட்ட 234 சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ம்தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, கன்னியா குமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகு திக்குட்பட்ட சுமார் 15,16,580 க்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். அவர்களில் 18 வயது முதல் 19 வயது வரையிலான சுமார் 32,949 முதல் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அந்தவகையில் 24 வயதுக் குட்பட்ட வாக்காளர்கள் 10 சதவீதற்கு அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் வாக்காளர்களாகிய நீங்கள் உங்களுடைய ஜன நாயக கடமையினை ஆற்றுவ தோடு மட்டுமல்லாமல், வாக்க ளிப்பதில் பெருமை கொள்ள வேண்டும். 40 வயதிற்கு மேற் பட்டவர்கள் மற்றும் வேலை யில்லாதவர்கள் தான் வாக்க ளிப்பார்கள் என்ற மாயயை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்ப வர்களின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது, அதிகமா னோர் தினக்கூலி வேலைக்கு செல்பவர்கள், கடைக் கோடி கிராமங்களை சார்ந்தவர்கள், 85 வயது முதல் 100 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் ஆர்வ மாக சென்று வாக்களிக்கி றார்கள். அந்தவகையில் முதல் வாக்காளர்களாகிய நீங்களும் உங்களுடைய பொறுப்பை தட்டி கழிக்கா மல், வாக்களிப்பது நம் அனைவருடைய தார்மீக கடமை என்பதனை புரிந்து கொள்ளவதோடு, வாக்களார் பட்டியல் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை யும் சரிபார்த்திட வேண்டும். மேலும் கல்வி நிறுவனங்க ளில் பயிலும் மாணவர்களா கிய நீங்கள் வாக்களிப்பதால் நமக்கு என்ன பயன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு வருகை தந்துள்ள நீங்கள் உங்களுடன் பயிலும் வாக்குரிமை பெற்ற அனைத்து மாணவ மாணவியர்களிடத்திலும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அன்று வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்து, அதன் அடையாளமாக உங்கள் கையில் வைக்கப்படும் மையினை, அடுத்த நாள் வகுப்புக்கு வரும் போது முதல்வர் மற்றும் பேராசிரி யர்களிடம் காண்பித்து, நான் வாக்களித்தேன் என்று பெருமையுடன் கூற வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக இருப்பது போல் வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும். இவ்வாறு பேசினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர்  மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆகியோர் மாணவ மாணவியர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டதோடு, பேச்சு போட்டிக்கான தலைப்புகளை அறிமுகப்படுத்தினர்.