கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியம் 13 ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தனலட்சுமி மணிவண்ணன் சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்கு கேட்டு குமராட்சி கிழக்கு தெருவில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனுசாமி, பாலமுருகன், ஜெயக்குமார், பிரபாகரன், சின்னசாமி ஆகியோர் உடனிருந்தனர்.