tamilnadu

img

செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்

சென்னை:

மக்களவைத் தேர்தலின் போது கரூர் திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.இந்நிலையில், இருவர் மீதும் கரூர் மாவட்டதேர்தல் அதிகாரி அன்பழகன் தாக்குதல் முயற்சி புகார் கொடுத்திருந்தார்.


இந்நிலையில் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வேண்டி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி, ஜோதிமணி, வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட மூவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.