tamilnadu

img

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடகம் கைவிட வேண்டும்... எடியூரப்பாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்....

சென்னை:
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிடவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அம்மாநில  முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். மேகதாது அணை தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதலமைச்சர்  பி.எஸ். எடியூரப்பாசனிக்கிழமையன்று கடிதம் எழுதி யிருந்தார்.  

அந்த கடிதத்தில், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது. மேகதாது திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதன் மூலம் தமிழகம், கர்நாடகா என இருமாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் தொடர்புடைய அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அழைப்பு விடுத் திருந்தார்.

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு  மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. எனவே, பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. மேகதாது அணை கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. தமிழகம் - கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திடவேண்டும் என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.