பொன்னுலகத்தைக் காண செங்கொடியோடு போராட வேண்டும்!
தருமபுரியில் நடைபெற்ற 24 ஆவது மாநாட்டு கருத்தரங்கில் சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், மக்கள் படுகின்ற கஷ்டம் நிச்ச யம் தீரும் என்றும், அப்படியொரு பொன்னுல கத்தைக் காண செங்கொடியோடு மக்கள் இணைந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டம்
‘சோசலிசமே மாற்று’ என்ற தலைப்பில் பேசிய உ.வாசுகி, “தொழிலாளிகள், விவசாயி களுக்கு வேலை கிடைப்பதற்கான போராட் டங்களை கம்யூனிஸ்ட்கள் தான் நடத்துகின்ற னர். முதலாளித்துவ சுரண்டல் குறித்து எந்த அரசியல் கட்சியும் பேசுவதில்லை. சோசலிசம் என்ற வார்த்தையை கம்யூனிஸ்ட்களைத் தவிர மற்ற அரசியல் கட்சிகள் பேசுவ தில்லை” என்றார். “அமெரிக்கா ஒரு ஏகாதிபத்திய நாடு என்று கம்யூனிஸ்ட்டுகளாகிய நாம் மட்டும் தான் பேசுகிறோம். உண்மையிலேயே இந்தி யாவில் இருக்கக்கூடிய முதலாளித்துவ சமூக அமைப்பு நிறைய பிரச்சனைகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே முதலா ளித்துவத்துக்குள்ளேயே தீர்வு காண முடியாது” என வலியுறுத்தினார்.
சோசலிசமே ஒரே மாற்று “
கம்யூனிஸ்ட்கள் தான் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கப் போராடி வருகின்ற னர். மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முதலாளித்துவம் மாற்று அல்ல; சோசலிசம் தான் மாற்று” என்றார். “அடிப்படைப் பிரச்சனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கக்கூடிய சமூக அமைப்பைத் தூக்கி எறியாமல் வெறும் தலைவர்களை மாற்றி அல்லது அரசியல் கட்சிகளை மாற்றி ஆட்சியில் அமர வைப்ப தால் நமக்கு எந்த பலனும் கிடைக்காது. இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளித்துவ ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும். அது மட்டும் போதாது; ஒட்டுமொத்த முதலா ளித்துவ அமைப்பை மாற்ற வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நல்லகாலம் பிறக்கும்” என்று தெரிவித்தார்.
மக்களிடம் ஓட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு சேவை “
பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சித்தாந் தத்தை பின்பற்றுகிற ஒரு அமைப்பு முறை வேண்டும் என்றால் அது சோசலிசம் தான். நடக்கின்ற பிரச்சனைகளுக்கு நாம் மட்டும் தான் போராடுகிறோம். மோசமான சமூக அமைப்பை மாற்றுவதற்கு செங்கொடி இயக்கத்தோடு சேர்ந்து மக்களும் போராட வேண்டும்” என்றார். “ஆளும் அரசின் கொள்கைகள்தான் மக்கள் வாழ்க்கையை மோசமாக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, உலகலாவிய பிரச் சனை. உழைப்பாளிகளுக்குப் போதுமான ஊதியம் வழங்குவதில்லை, ஊதியம் வெட்டு, ஓய்வூதியம் சுருங்கிவிட்டது. பல நாடுகளில் ஓய்வூதியம் இல்லை” என்று சுட்டிக்காட்டினார். “அரசு பின்பற்றுகிற கொள்கை கார்ப்ப ரேட்டுகளுக்கு சாதகமாக உள்ளது. அரசை நம்பியிருக்கின்ற மக்களுக்கு துன்பத்தை தான் கொடுக்கின்றனர். இது அரசுக்குத் தெரியும். ஓட்டுக்கு மட்டும் தான் மக்களிடம் வருவார்கள். சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் தான்” என்று விமர்சித்தார்.
சோசலிசம் கற்பனையல்ல
“மோடி அரசின் கொள்கைகளை விமர் சிக்கிற எல்லா கட்சிகளும் மாற்று கொள்கை யை முன்வைப்பதில்லை. செங்கொடி இயக்கம் தான் மாற்று கொள்கையையும், மாற்று பொருளாதார கொள்கையை முன்வைக்கிறது” என்றார். “பிரச்சனைகளே இல்லாத சமூக அமைப்பை சோசலிசம் என்று சொல்கிறோம். நல்ல கல்வி, வேலைவாய்ப்பு, கிடைக்கின்ற சம்பளத்தில் எல்லா பொருட்களையும் வாங்க முடியும் என்ற நிலை வரவேண்டும். இப்ப டிப்பட்ட ஒரு சமூகம் உருவாக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய கனவு” என்றார். “இந்த சமூகத்தில் செல்வங்களை உரு வாக்குகின்ற விவசாயிகள், தொழிலாளிக ளின் கையில் ஆட்சி அதிகாரம் வர வேண்டும். பிரச்சனையே இல்லாத சமூகம் கற்பனை அல்ல. உலகத்தின் மூன்றில் ஒரு பாக நாடுகளில் செங்கொடி பட்டொளி வீசி பறந்து மக்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு முன்னுதாரணமாக உள்ளது” என்றார். “இந்த மாற்றம் இந்தியாவிலும், உல கத்தின் பல பகுதிகளிலும் சோஷலிச சமூகம் உறுதியாக வரும். முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு பின்னால் சோஷலிசம் தான் வரும். மக்கள் படுகின்ற கஷ்டம் நிச்சயம் தீரும். அப்படியொரு பொன்னுலகம் உள்ளது. இதற்கு செங்கொடியோடு மக்கள் இணைந்து போராட வேண்டும்” என அழைப்பு விடுத்தார்.
மதுரை மாநாடு - குடும்பத்துடன் வருக!
“கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. மக்களி டையே உண்டியல் மூலம் நிதி சேகரித்து தான் மாநாட்டை நடத்தவுள்ளோம். உண்டி யல் குலுக்கியாக இருப்பதில் நாங்கள் பெரு மைப்படுகிறோம். நாங்கள் ஏழைகளிடம் நிதி திரட்டுகிறோம், அவர்களுக்கு விசுவாசமாக செங்கொடி இயக்கம் இருக்கிறது” என்றார். “தியாகப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக மதுரையில் நடக்கும் மாநாட்டில் குடும்பத் தோடு பங்கேற்க வேண்டும்” எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.