articles

img

ஏகாதிபத்தியம், பாசிஸ்ட் மற்றும் நாஜிக்களின் ஆயுதங்களை ஏந்தியுள்ள ஆர்எஸ்எஸ்

ஏகாதிபத்தியம், பாசிஸ்ட் மற்றும் நாஜிக்களின் ஆயுதங்களை ஏந்தியுள்ள ஆர்எஸ்எஸ்

ஒவ்வொரு இந்தியரும் அவரவர் மத நம்பிக் கைகளின்படி வாழ சுதந்திரம் உண்டு. இதுவே நமது அரசமைப்புச்சட்டம் பொறித்துள்ள மதச் சார்பின்மை என்னும் விழுமியத்தின் அடித்தளமாகும். அதே சமயத்தில், மதம் ஆட்சியில் தலையிடாது என்ப தும் இதன் பொருளாகும். எனினும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஆட்சி செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் இந்த இரண்டு கொள்கைகளையும் மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

அடுத்தக்கட்ட நடவடிக்கை

இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் திட்டத் தை அவர்கள் மெதுவாகவும் படிப்படியாகவும் செயல் படுத்தி வருகின்றனர். இதனைப் பல ஆண்டு காலமா கவே அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடித்தது  போன்ற அவர்களின் செயல்களில் இதை நாம்  காண்கிறோம். அதேபோன்று மதத்தின் அடிப்படை யில், பெரும் பகுதி மக்களுக்கு குடியுரிமையை மறுக்கும் விதத்திலும் சட்டங்களை அமல்படுத்தத் தொடங்கி யிருப்பது இந்தத் திசைவழியில் அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

நிராகரிக்கப்பட்டவாதம்

குடியுரிமை தொடர்பாக இரண்டு முக்கிய கண்ணோட் டங்கள் உள்ளன. ஒன்று பிறப்பின் அடிப்படையில் குடி யுரிமை வழங்குவது. மற்றொன்று, இனம் மற்றும் கலாச் சாரத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது. 1949ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நம் அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிறப்பால் குடி யுரிமை என்ற நவீன கண்ணோட்டத்தை நிலைநிறுத்தி யது. அரசியல் நிர்ணயசபையில் கூட, குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று வாதங்கள் எழுப்பப்பட்டன. எனினும், அரசியல் நிர்ணய சபை இந்த வாதத்தை நிராகரித்தது. மதத்தின் அடிப்ப டையில் குடியுரிமை வழங்குவது ஒரு முற்போக்கான சமூகத்திற்குப் பொருந்தாது என்பதே அரசியல் நிர்ணயசபை ஏற்றுக்கொண்ட நிலைப்பாடு. மதத்தை குடியுரிமைக்கு அடிப்படையாக மாற்றும் எந்த தேசமும் மதச்சார்பற்ற அரசு அல்ல, மாறாக தெய்வ ஆளுகை க்கு உட்பட்ட ஓர் அரசாகும். அவ்வாறு மாற்றுவது நம் அரசமைப்புச்சட்டத்திற்கு முரணான ஒன்றாகும். இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 5 முதல் 11 வரை யிலான பிரிவுகள், குடியுரிமை குறித்து விளக்கு கின்றன. 5(அ) பிரிவு, இந்தியாவில் பிறந்த எவரும் இந்தியக் குடிமகனாக இருப்பார் என்று சந்தே கத்திற்கு இடமின்றி கூறுகிறது.

பலவீனப்படுத்திய திருத்தங்கள்

எனினும், பின்னர் இதிலிருந்து விலகல்கள் ஏற் பட்டன. 1986இல் ராஜீவ் காந்தி அரசாங்கமும் 2003இல் வாஜ்பாய் அரசாங்கமும் செய்த திருத்தங்கள் இந்த நிலைப்பாட்டை பலவீனப்படுத்தின. குறிப்பாக 2003 திருத்தத்தில், பெற்றோரில் ஒருவர் சட்டவிரோதமாகக் குடியேறியவராக இருக்கக்கூடாது என்ற விதி சேர்க்கப்பட்டது. இன்று நாம் காணும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் (CAA-Citizenship Amend ment Act-இன்) முதல் பதிப்பு என்று இதை அழைக்கலாம்.  பாஜக இதைச் செய்திருந்தாலும், 2010இல் இரண்டா வது ஐமுகூ அரசாங்கம் தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (National Population Register) தயா ரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பாஜக அரசாங்கம் இன்னும் ஒரு படி மேலே சென்று தேசிய  குடிமக்கள் பதிவேட்டை (National Registration of Citizens) தயாரிக்கும் நோக்கத்தை அறிவித்தது. மக்கள் அதிருப்தி காரணமாக தேசிய மக்கள்தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டும் நிறுத்தி வைக்கப்பட வேண்டியிருந்தது.

அமித் ஷா கூறும் காலவரிசையும் அசாம் மாநில அனுபவமும்

குடியுரிமை திருத்தச் சட்டம் தற்போதுள்ள குடிமக்களைப் பாதிக்காது என்று சங் பரிவாரங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன. எனினும், ஒன்றிய உள் துறை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், ‘காலவரிசை’யைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அந்தக் காலவரிசை என்ன? முதலாவதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) வரும். அடுத்து, தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) வரும். இதுதான் அவர் கூறும் கால வரிசை. தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் சேர்க்கப்படு வதற்கு, ஒருவர் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் அளவுகோல்களின் அடிப்படையில் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். அப்படியெனில், குடியுரி மைத் திருத்தச் சட்டம் என்பது, ஏற்கனவே குடிமக்க ளாக உள்ளவர்களைப் பாதிக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?  தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கான தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில், பெற்றோர்க ளின் பிறப்பிடம் குறித்து உரிய ஆவணங்களை அளிக்க முடியாதவர்கள்மீது சந்தேகத்தின் நிழல் படிந்தது. அசாமில் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்ட போது இதனை நாம் நன்கு பார்த்தோம். சுமார் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டார்கள். இவ்வாறு நீக்கப்பட்ட வர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்களாவர்.

42 சதவீத மக்களின் நிலை...

சங் பரிவாரத்தின் பிரதான இலக்குகள் மதச் சிறு பான்மையினராக இருந்தபோதிலும், அனைத்து மதங்களிலும் உள்ள  படிக்காதவர்கள் மற்றும் ஏழைகள் கூட தேவையான ஆவணங்களை வைத்தி ருக்காமல் இருக்கலாம். அவர்களின் குடியுரிமையும் சந்தேகத்தின் நிழலின் கீழ் வரும். தெளிவான ஆவணங்கள் இல்லாத நிலையில் பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளின் குடியுரிமையும் சந்தேகத்திற் குரியதாகிவிடும். இந்தியாவில் சுமார் 42 சதவீத மக்க ளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை என்று மதிப்பி டப்பட்டுள்ளது. அவர்களின் குடியுரிமை எவ்வாறு தீர்மானிக்கப்படும் என்பது இன்னும் தெளிவுபடுத்தப் படவில்லை. இதன் பொருள் தேவையான ஆவ ணங்கள் இல்லாததால் கோடிக்கணக்கான மக்கள் இந்திய குடிமக்களாக இருப்பதிலிருந்து நீக்கப்படு வார்கள். அவர்கள் தடுப்பு மையங்களில் அடைக்கப் படலாம். அல்லது சிவில் உரிமைகள் இல்லாத மக்க ளாக மாற்றப்படலாம். இதுதான் நம் முன் உள்ள இருண்ட எதார்த்தமான நிலையாகும்.

நாஜி ஜெர்மனியின் நகல்...

இந்தியாவில் இன்று நாம் காணும் விஷயங்கள், நாஜி ஜெர்மனியில் நடைபெற்ற விஷயங்களுடன் ஒத்துப்போவதைக் காண முடியும். குறிப்பாக பீகாரில் வாக்காளர் பட்டியலைத் திருத்துதல் என்ற போர்வை யில் இந்திய தேர்தல் ஆணையம்  மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கைகள், தேசிய குடிமக்கள் பதி வேட்டைத் தயாரிப்பதற்கான கொல்லைப்புற வழி யாகவே தோன்றுகிறது. 1935 செப்டம்பர் 15 அன்று, நாஜி ஜெர்மனி, யூத எதிர்ப்பு மற்றும் இனவெறிச் சட்டங்களின் தொகுப் பாக, நியூரம்பர்க் சட்டங்களை இயற்றியது. இது முக்கி யமாக இரண்டு சட்டங்களைக் கொண்டிருந்தது. ரீச் குடியுரிமைச் சட்டம் மற்றும் ஜெர்மனியுடன் ரத்த சம் பந்தம் உடையவர்கள் மற்றும் ஜெர்மன் கௌரவத் தைப் பாதுகாப்பதற்கான சட்டம். ‘விரும்பத்தகாத வர்கள்’ என்று கருதப்படும் யூதர்களிடமிருந்து வாக்க ளிக்கும் உரிமை, பொதுப் பதவிகளை வகிக்கும் உரிமை மற்றும் சட்டப் பாதுகாப்புகளை அனுப விக்கும் உரிமை உள்ளிட்ட குடியுரிமை உரிமைகள் பறிக்கப்பட்டன. இரண்டாவது சட்டம் யூதர்களுக்கும் ‘ஜெர்மன் அல்லது தொடர்புடைய இரத்தம் கொண்ட குடிமக்களுக்கும்’ இடையிலான திருமணங்கள் மற்றும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைத் தடை செய்தது. 45 வயதுக்குட்பட்ட ஜெர்மன் பெண்களை தங்கள் வீடுகளில் பணியமர்த்துவதையும், யூதர்கள் ஜெர்மன் கொடியைக் காட்டுவதையும் தடை செய்தது.

மதத்திலிருந்து இன வகைக்கு  மறு வரையறை

இந்தச் சட்டங்கள் யூத அடையாளத்தை மதத்திலி ருந்து இன வகைக்கு மறுவரையறை செய்தன. தனிப் பட்ட நம்பிக்கைகள் அல்லது மத நடைமுறைகளைப் பொருட்படுத்தாமல், யார் யூதர்களாகக் கருதப்படுகி றார்கள் என்பதைத் தீர்மானிக்க வம்சாவளியைப் பயன் படுத்தின. மூன்று அல்லது நான்கு யூத தாத்தா பாட்டி களைக் கொண்டவர்கள் யூதர்களாக வகைப்படுத் தப்பட்டனர். அதே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு தாத்தா பாட்டிகளைக் கொண்டவர்கள் ‘கலப்பு இனம்’ என்று முத்திரை குத்தப்பட்டனர். நியூரம்பர்க் சட்டங்கள் யூதர்களை சட்டப்பூர்வமாக துன்புறுத்துவதில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது இறுதியில், யூதர்களைப் பூண்டோடு அழித்திட அடித்தளம் அமைத்தன. நாஜி ஜெர்மனிக்கும் இந்துத்துவா கொள்கையைப் பின்பற்றிவரும் இந்திய ஆட்சி யாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகள், உள்ளடக்கத்திலும் சரி, நோக்கத்திலும் சரி, மிகவும் அப்பட்டமானவையாகும்.  இவற்றை மேலும் விளக்க வேண்டியதில்லை. இந்த நிகழ்ச்சிப்போக்குகளின் பின்னணியில்தான் ஆர்எஸ்எஸ் 1920கள் மற்றும் 1930களில் நாஜி ஜெர்மனி மற்றும் பாசிஸ்ட் இத்தாலியிலிருந்து உத்வேகம் பெற்றது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். இந்து மகாசபாவின் தலைவரும் ஆர்எஸ்எஸ் நிறுவனருமான கேசவ் பலிராம் ஹெட் கேவாரின் வழிகாட்டியுமான பி.எஸ். மூஞ்சே 1931இல் இத்தாலிக்கு விஜயம் செய்தது, அங்கே முசோலி னியை சந்தித்து, அவருடைய பாசிசக் கருத்துக்களை தங்களுடைய இந்து மதவெறிக்கு ஏற்ப மாற்ற முனைந்தது ஒரு முக்கிய தருணமாகும்.

 மூஞ்சேயும் முசோலினியும்

1931 மார்ச் 15 முதல் 24 வரை பி.எஸ். மூஞ்சே இத்தாலி யில் பயணம் செய்து, பிரதமர் பெனிடோ முசோலினி யைச் சந்தித்தார். மூஞ்சே தன்னுடைய நாட்குறிப்பில் முசோலினியை மிகவும் புகழ்ந்து எழுதியிருக்கிறார். “இத்தாலியின் இராணுவ மறுமலர்ச்சி” (“military regeneration of Italy”) என்று முசோலினியின் தொ லைநோக்குப் பார்வையைப் பாராட்டி எழுதியுள்ள, மூஞ்சே, “இந்தியாவுக்கும், அதிலும் குறிப்பாக இந்து இந்தியாவுக்கும் இந்துக்கள் மத்தியில் இராணுவ மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இதுபோன்று ஒரு நிறு வனம் தேவை” என்று வெளிப்படையாகவே எழுதி யிருக்கிறார். இவற்றால் ஈர்க்கப்பட்டு, மூஞ்சே,  இந்து இந்தி யாவை இராணுவமயமாக்கும் நோக்கில், 1935ஆம் ஆண்டு மத்திய இந்து இராணுவக் கல்விச் சங்கத்தை யும், 1937ஆம் ஆண்டு நாசிக்கில் போன்சாலா இராணு வப் பள்ளியையும் நிறுவினார். பின்னர் ஆர்எஸ்எஸ் இதன் அம்சங்களை ஏற்றுக்கொண்டது. இத்தாலியில் பாசிஸ்ட் இளைஞர் ஸ்தாபனம் தன் இயக்கத்திற்கு எங்ஙனம் இளைஞர்களைச் சேர்த்ததோ அதேபாணி யில் ஆர்எஸ்எஸ் இயக்கமும் தன் இயக்கங்களுக்கு இளைஞர்களைச் சேர்த்தது.

இன, மத அடையாளம்  பாசிச மாதிரி சமூக ஒழுங்கு

முசோலினியின் உத்திகள் மீதான மூஞ்சேயின் கருத்துகளும் அபிமானமும் இந்தியாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய இந்து தேசியவாத ஸ்தாபனங்க ளின் இராணுவ மற்றும் ஸ்தாபன நெறிமுறைகளை வடிவமைப்பதில் கருவியாக இருந்தன. அவை ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்தாபன வளர்ச்சியில் நீடித்த தாக் கத்தை ஏற்படுத்தின. ஹிட்லர் மற்றும் முசோலினியின் ஆட்சிகளின் அம்சங்களை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் இரண்டா வது தலைவராக இருந்த மாதவ் சதாசிவராவ் கோல் வால்கரும், சித்தாந்தவாதியான விநாயக் தாமோதர் சாவர்க்கரும் வெளிப்படையாகவே பாராட்டினார்கள். குறிப்பாக அவர்களின் “கலாச்சார தேசியவாதம்” என்ற கருத்தாக்கத்தால் கவரப்பட்டனர். ஆதிக்கம் செலுத்தும் இன அடையாளத்தையோ அல்லது மத அடையாளத்தையோ சமூகத்தை ஒழுங்கமைத்திடும் பாசிச மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்ற கருத்தால் ஈர்க்கப்பட்டார்கள்.

பாசிச, நாஜிச மாதிரியும் ஆர்எஸ்எஸ்- இன் தேசியமும்

கோல்வால்கர் 1939இல் எழுதிய ‘நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’ என்னும் நூல் ஹிட்லரின் கொள்கைகளை வெளிப்படையாகவே புகழ்ந்திருப்ப துடன், இந்தியா, இந்து தேசமாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும், எப்படி நாஜிக்கள் யூதர்களை நடத்தினார்களோ அதேபோன்றே இங்குள்ள மதச் சிறுபான்மையினர் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டது. இந்தப் புத்தகம் ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந் தத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனை பாசிச சிந்தனையுடன் இணைக்கிறது. கோல் வால்கர் தனது உரைகளில், ஆர்எஸ்எஸ்-இன் தேசி யக் கண்ணோட்டத்தை பாசிச மற்றும் நாஜி மாதிரி களுடன் இணைத்துள்ளார். தனது ‘சிந்தனைத் தொ குப்பு’ (‘Bunch of Thoughts’) என்னும் நூலில் முஸ் லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் இந்தி யாவின் உள் அச்சுறுத்தல்கள் என்று அவர் விவ ரித்திருக்கிறார்.

நியூரம்பர்க் சட்டங்களும்  பீகாரின் தேர்தல் நடைமுறையும்

நாஜி ஜெர்மனி, இனவாத நியூரம்பர்க் சட்டங்களை இயற்றிய பின்னர், அனைத்து ஜனநாயக உரிமைக ளையும் முற்றிலுமாக ஒழித்துக்கட்டியது. தேர்தல்க ளை நடத்துவதையும் நிறுத்தி விட்டது. இதேபாணியை இந்துத்துவா மோடி அரசாங்கம் இப்போது பீகாரில் பின்பற்றத் தொடங்கி இருக்கிறது. பீகாரில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (National Registration of Citizens) மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஆகியவை நாஜி ஜெர்மனியின் கொள்கைகளாகும். ஆர்எஸ்எஸ் இயக்கம் அவற்றை இன்றைய இந்தி யாவிற்குப் பொருத்தமானதாகக் கருதி, செயல்படுத்த முன்வந்திருக்கிறது. அதனால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தற்போதைய ஆட்சியாளர்களின் பாசிசபாணிக் கொள்கையை, மரபுசார்ந்த பாசி சத்திற்கு (classical fascism) மாற்றாக நவீன பாசிசம் (neo-fascism) என்று சரியாகவே அடையாளம் கண்டிருக்கிறது.

 மத அடையாள குடியுரிமை

இந்தியாவில் உள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம், நாஜிக்களின் ரீச் குடியுரிமைச் சட்டத்தை எதிரொ லிக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டமும் (CAA- உம்), தேசியக் குடிமக்கள் பதிவேடும் (NRC-உம்) இணைந்தால், குடியுரிமை மத  அடையாளத்துடன் இணைக்கப்பட்ட ஓர் அமைப்பை உருவாக்குகிறது.  இந்த நடவடிக்கைகள் அனைத்தும், இந்திய முஸ்லிம்க ளைக் குறிவைத்து, அவர்களை இரண்டாம்தர குடி மக்களாகத் தரம் தாழ்த்தும் விதத்திலும், அவர்க ளால் தேவையான ஆவணங்களை அளிக்க முடியா விட்டால் அவர்களை நாடற்றவர்களாக மாற்றிடவும், கொண்டுவரப்பட்டிருக்கின்றன.  நாஜிக்களின் சட்டங்கள் யூதர்கள் மற்றும் பிற சிறுபான்மையினரை எவ்வாறு தனிமைப்படுத்தி, உரிமைகளை இழக்கச் செய்தனவோ  அதேபோன்றே இவர்கள் கொண்டு வந்துள்ள சட்டங்களும் பிரதிபலிக்கின்றன.

யூதர்களை பொது வாழ்விலிருந்து அகற்றியது போல்...

குறிப்பாக பீகார் போன்ற ஒரு மாநிலத்தில், சிறப்பு தீவிர திருத்தம்  (Special Intensive Revision) என்னும் செயல்முறை, விளிம்புநிலை குழுக்களின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படக்கூடும் என்கிற கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. நாஜி ஜெர்மனி எப்படி யூதர்களை பொது வாழ்க்கையி லிருந்து தனிமைப்படுத்த சட்டரீதியாகவும், நிர்வாக ரீதி யாகவும் நடவடிக்கைகளை எடுத்ததோ அதேபோன்று இங்கேயும் நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை நினை வுபடுத்துகிறது. மத அடிப்படையில் குடியுரிமையை வரையறுக்கவும் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கவும் சட்டம் மற்றும் அதிகாரத்துவத்தைப் பயன் படுத்துவது அந்த திசைவழியில் ஆபத்தான நட வடிக்கைகளாகும். இந்நடவடிக்கைகள் நாட்டிலுள்ளமதச் சிறுபான்மையினருக்கும், மதச்சார்பின்மைக்கும் தீவிர ஆபத்து நிறைந்த எதிர்காலத்தைச் சுட்டிக்காட்டுகிறது. 1933இல் நாஜிக்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஜெர்மனி யில் நடந்த பயங்கரங்களை ஒருவர் நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. யூதர்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட சட்டத்தில் மாற்றங்களுடன் அவர்களும் தொடங்கினர். இந்தியாவில், இந்தக் கொள்கைகள் முஸ்லிம்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட குழுக்களை குறிவைத்து, இந்திய  ஜனநாயகம் ஒரு ‘தெய்வ ஆளுகை அரசாக’ (‘theocratic state’) மாற்றுவதற்கான நடவடிக்கையாகும். இது ஆழமான முறையில் கவலைகளை எழுப்புகின்றன.

பிரிட்டிஷாரை தோற்கடித்த  ஒற்றுமை போல்

மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவை அந்நியக் கருத்துக்கள் என்று கூறும் இந்துத்துவா மதவெறி யர்கள்தான், உண்மையில் ஏகாதிபத்தியம், நாஜி மற்றும் பாசிசம் போன்ற வெளிநாட்டுக் கருத்துக்களைப் பயன் படுத்தி தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல் கின்றனர். பிரிட்டிஷாரை தோற்கடித்த அதே ஒற்றுமை யுடன் ஆர்எஸ்எஸ்-இன் மதவெறி நிகழ்ச்சி நிரலை நாம் தோற்கடிக்க வேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் விலகி இருந்ததால், ஆர்எஸ்எஸ்- இன் ஆதரவு இல்லாமல் இந்திய ஜனநாயகக் குடியரசு அனைத்து இந்தியர்களுக்கும் உருவாக்கப்பட்டது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர் கள், சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள் மற்றும் கடவுள்  நம்பிக்கையற்றவர்கள் இணைந்து நின்று போராடியதன் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மண்டியிட்டது. கம்யூ னிஸ்டுகள் உட்பட பல துணிச்சலான தேசபக்தர்கள் அந்தப் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். எனவே, இந்த நாடு அதன் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சொந்தமானது என்பதையும், நமது ஒற்றுமை பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம்.

தமிழில் : ச.வீரமணி