tamilnadu

img

நெல் உற்பத்தியை அதிகரிக்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

நெல் உற்பத்தியை அதிகரிக்க ரூ.160 கோடி ஒதுக்கீடு

நெல் உற்பத்தியை அதிகரிக்க ரூ.160  கோடி ஒதுக்கீடு ரூ.1.35 கோடியில், காலநிலை மாற்றத்தினால் விவசாயம் மற்றும் சுற்றுச் சூழலில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள  திறனுடைய கிராமங்கள் உருவாக்கப்படும். ரூ.68 கோடியில் 51 நீர்வடிப் பகுதி களில் 30,190 ஹெக்டேர் பரப்பில் தரும புரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, இராமநாத புரம், தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங் களில் நீர்வடிப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும். விவசாய உற்பத்தியாளர் நிறு வனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொரு ளீட்டு கடன் வழங்கப்படும். உழவர் சந்தை காய்கறிகள், நுகர் வோர் வீட்டுக்கு எடுத்துச் சென்று வழங்க உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும். வேளாண்மையில் புதிய கண்டு பிடிப்புகளுக்கான “டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிதி” உருவாக்கப்படும். மின்னணு தேசிய வேளாண் சந்தை யுடன் 56 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ரூ.39.20 லட்சம் ஒதுக்கீட்டில் ஒருங்கிணைக்கப்படும். ரூ.2.50 கோடியில் திறந்தவெளி பாசன கிணறுகள் புனரமைக்கப்படும். கோடை உழவுக்கு மானியம் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் மாதம் 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம் நடத்தப்படும். மின்சார இணைப்பு இல்லாத 1000 விவசாயிகளுக்கு தனித்து சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் வழங்க ரூ.24 கோடி ஒதுக்கீடு ஊட்டச்சத்துள்ள வெண்ணைப்பழம் சாகுபடியை தென்காசி, திண்டுக்கல், தேனி,  கள்ளக்குறிச்சி, நீலகிரி, சேலம் மாவட்டங் களில் 500 ஏக்கரில் ஊக்குவிக்க ரூ.69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். ரூ. 5 கோடியில் புதிய பலா ரகங்கள் பரவலாக்கும், பலாவில் ஊடுபயிர் சாகுபடி மேற்கொள்ளவும், பலா மதிப்புக் கூட்டு தலைக்கான பயிற்சி வழங்கப்படும். இ-வாடகை செயலி பனை மரங்களின் எண்ணிக் கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் ரூ.1.65 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.1 கோடியில் உதிரி வகை ரோஜா  மலர்கள் சாகுபடி 500 ஏக்கரில் மேற்கொள்ள  நறுமண ரோஜாவுக்கு சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். ரூ.1.60 கோடியில் பாரம்பரிய மல்லிகை சாகுபடியை அதிகரிக்க மல்லி கைக்கான சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். வெங்காயத்தின் விளைச்சல் குறை யும் காலங்களில் சந்தைக்கு நிலையான வரத்தினை உறுதிப்படுத்தும் பொருட்டு வெங்காய சேமிப்பு கூடங்கள் ரூ.18 கோடி யில் அமைக்கப்படும். ரூ.2.4 கோடியில் பாரம்பரிய காய்கறி ரகங்கள் சாகுபடி 2,500 ஏக்கரில் மேற்கொள்ளப்படும்.

கோடை காலங்களில் சாகுபடி குறை வால் ஏற்படும் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திடவும் முக்கிய காய்கறி கள் ஏப்ரல், மே மாதங்களில் சாகுபடி செய்திட ரூ.10.50 கோடி ஒதுக்கீடு. தென்னை பரப்பு விரிவாக்கம், ஊடு பயிர் சாகுபடி, மறுநடவு மற்றும் புத்தாக்கம், செயல்விளக்க திடல், ஒருங்கி ணைந்த பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக ரூ.35.26 கோடி ஒதுக்கீடு. உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும். சிறு தானிய உற்பத்தி இயக்கம் பட்டியல், பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளின் பொரு ளாதார சுமையைக் குறைக்கும் திட்டத்துக்கு  ரூ.21 கோடி ஒதுக்கீடு. ரூ.52.44 கோடியில் சிறுதானியப் பயிர்களின் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்கப்படும். ரூ.108.6 கோடி ஒதுக்கீட்டில் உணவு எண்ணெய்த் தேவையில் தன்னிறைவு அடைய எண்ணெய் வித்துகள் இயக்கம் தொடங்கப்படும். சுவை தாளித பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் 2,500 ஏக்கரில் சீமைக் கருவேல மரங் களை அகற்றி மிளகாய் சாகுபடியை மேற் கொள்ள ரூ.11.74 கோடி ஒதுக்கீடு செய்யப் படும். டெல்டா அல்லாத 29 மாவட்டங் களில் நெல் சாகுபடியை அதிகரிக்க சிறப்பு  தொகுப்பு திட்டம் உருவாக்கப்படும். மானாவாரி நிலங்களில் 3 லட்சம் ஹெக்டேரில் கோடை உழவு செய்ய ஹெக் டேருக்கு ரூ.2,000 மானியம் வழங்கப் படும். மலைப்பகுதி விவசாயிகள் முன்னேற் றத்துக்காக சிறப்புத் திட்டம் செயல்படுத்தப் படும்.