tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் நலன்

வேளாண்மையை நம்பி யுள்ள நிலமற்ற வேளாண்மை தொழிலாளர்களின் குடும்ப நலன்களை பாதுகாக்கும் வகையில், விபத்து மரணத் திற்கு இழப்பீடு ரூ.1 லட்சத்தி லிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல், விபத்தினால் ஏற்ப டும் உடல் உறுப்பு இழப்புக்கான  நிவாரணம் ரூ.20 ஆயிரத்தி லிருந்து ஒரு லட்சமாகவும், இயற்கை மரணத்திற்கான நிதி யுதவி ரூ.20 ஆயிரத்திலிருந்து 30 ஆயிரமாகவும், இறுதிச் சடங்கு செலவுக்கான நிதியுதவி  ரூ.2,500 லிருந்து 10 ஆயிர மாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்புக்கு ஊக்கத்தொகை

தமிழ்நாட்டில் 2024-25 அரவைப் பருவத்திற்கு கரும்பு வழங்கிய உழவர்களின் சிறப்பு ஊக்கத் தொகையாக கரும்பு  டன் ஒன்றுக்கு 349 ரூபாய்  வழங்க ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும்  புதிய கரும்பு ரக விதைகள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்க ரூ.1.53 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு

நல்லூர் வரகு (கடலூர்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டி னம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற  ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.

முந்திரி வாரியம்

முந்திரி சாகுபடியை அதிகரிக்க வும், முந்திரி சார்ந்த தொழில் நிறு வனங்களுக்கு ஊக்கமளிக்கவும் தொழிலாளர்களின் நலனைப் பாது காக்கவும் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில்  தமிழ்நாடு முந்திரி வாரியம் ஏற்படுத் தப்படும்.

டெல்டாவில் நெல் சேமிப்பு வளாகங்கள்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 6 நெல் சேமிப்பு வளாகங்கள், 25 ஆயிரம் இரும்பு இடைச் செருகுக் கட்டடை கள், 2,500 டிஜிட்டல் ஈரப்பத கருவிகள்  வழங்கப்படும். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தலா ஒரு டிராக்டருடன் கூடிய நெல் உலர்த்தும் இயந்திரம் நிறுவுவதற்கு ரூ.480 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும். டெல்டா மாவட்டங்களில் 22 நெல் சேமிப்பு  வளாகங்கள் அமைத்து கொடுக்கப்ப டும். மேலும் உணவு மானியத்திற்கு ரூ.835 கோடி ஒதுக்கப்படும்.