tamilnadu

img

4 மாநில முதலமைச்சர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என 4 மாநில முதலமைச்சர்களுக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாய வழிகாட்டுதல் படி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை அனுமதிக்க வேண்டும் என டெல்லி, ஒடிசா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், பட்டாசு விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவது, தமிழகத்தில் அதைச் சார்ந்துள்ள 8 லட்சம் தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் மற்றும் பொது சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறை அவசியமானது என்றும் எழுதியுள்ளார்.