tamilnadu

img

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டுவிட்டர் பக்கம் முடக்கம்  

பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டதால் டுவிட்டர் நிறுவனம் அவரது டுவிட்டர் பக்கத்தை முடக்கியுள்ளது.  

சென்னை – பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த கல்யாணராமன் மத மோதல்களை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பதிவிட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினர் கல்யாணராமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  
மேலும் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட அவரது பக்கத்தை முடக்க வேண்டும் என டிவிட்டர் நிறுவனத்துக்கும் பரிந்துரைத்தனர்.

தமிழ்நாடு காவல்துறையின் கோரிக்கையை அடுத்து கல்யாணராமனின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.