ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், நடிகர் சிம்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றைப் பாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சிம்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சர்ப்ரைஸுக்கு தயாராகுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆல்பம் பாடல் ஒன்றைப் பாடி உள்ளதாகவும், அப்பாடல் விரைவில் வெளியிட உள்ளதைத் தான் அவர் இவ்வாறு சூசகமாகக் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.