tamilnadu

img

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் பணி நீக்கம்!

சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் புகார் எழுந்த நிலையில், மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.கே.குமாரி நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். இதை அடுத்து, இன்று காலை கல்லூரியின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதை அடுத்து,  கலாஷேத்ரா கல்லூரியில் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை அடுத்து, புகாருக்குள்ளான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை மீண்டும் கல்லூரிக்குள் வரமாட்டோம் என்று மாணவர்கள் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் அத்தனை கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.