மருத்துவமனை பாதுகாப்பு படையை உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டாலும், மருத்துவர்கள் ஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்க 'மருத்துவமனை பாதுகாப்பு படை' பிரிவை உருவாக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.