சென்னை, ஏப். 3- தமிழ்நாடு லோக் ஆயுக்தா நீதிமன்ற நடுவராக ஓய்வுபெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா நடுவர் பி.தேவதாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் கே.ஜெயபாலன், ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நீதித்துறை சார்ந்த உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராம், மூத்த வழக்கறிஞர் கே.ஆறுமுகம் ஆகியோர் நீதித்துறை சாராத உறுப் பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.