tamilnadu

ஜீவாவின் மருமகள் காலமானார்

சென்னை:
இலக்கிய பேராசான்  ஜீவாவின் மருமகளும், ஜீவா. மணிக்குமாரின் மனைவியுமான விஜயலட்சுமி திங்களன்று(ஜன.13) உடல்நலமின்றி காலமானார். விஜயலட்சுமி முற்போக்கான பெண் மணி. சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். கணவர் ஜீவா. மணிக்குமாருக்கும், குடும்பத்தினருக்கும் பெரும் உதவியாக இருந்தவர்.உடல் நலமில்லாமல் தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜன.13 அன்று காலமானார். 14 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மேற்கு தாம்பரம் கஸ்தூரிபாய் நகர், வ.ஊ.சி. தெரு, 59, பாரதி இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ஏ.ஐ.டி.யு.சி. துணைப் பொதுச் செயலாளர் கே.ரவி, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஏழுமலை, மேகநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

விஜயலட்சுமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் இரா. முத்தரசன், “ விஜயலட்சுமி மறைவால் துயருற்றுள்ள, குடும்பத்தார், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற் குழு சார்பில் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார். ஜீவா.மணிக்குமார் அலைபேசி எண்: 94444 94657.