tamilnadu

ஜாக்டோ -ஜியோ வேலைநிறுத்த நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்துக... ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்

சென்னை:
ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்த நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தவும், பணிமாறுதல்களை ரத்து செய்து உத்தரவிடவும் பள்ளிக்கல்வித்துறைக்கு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டு
கோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது22.01.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிடவும், தண்டனை வழங்கியிருப்பின் அவற்றை ரத்து செய்திடவும், குற்றவியல் வழக்குகளைக் கைவிடவும் அரசாணை (நிலை) எண்: 9, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, நாள்: 2.2.2021 வெளியிடப்பட்டது.  

அந்த அரசாணையை உடனடியாகச் செயல்படுத்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 028761/அ3/இ1/2021 நாள்: 30.6.2021 செயல் முறை ஆணை வெளியிடப்பட்டுள் ளது. இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட, பழிவாங்கப் பட்ட ஆசிரியர்களின் துயர்துடைக்கும் தமிழ்நாடு அரசின் இந்நடவடிக்கையை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரிதும் வரவேற்கிறது. அதற்காகத் தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிலையில் மேற்கண்ட உத்தரவுகளின் முழுமையான பயன் ஆசிரியர்களுக்குக் கிடைப்பதில் உள்ள கீழ்க்கண்ட இடர்பாடுகளைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
பல மாவட்டங்களில் கீழ்நிலை அலுவலர்கள் 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்த மறுத்து வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தின் போது ஒழுங்கு நடவடிக்கையாகப் பணிமாறுதல் செய் யப்பட்ட ஆசிரியர்களின் பணிமாறுதல் உத்தரவுகளை ரத்து செய்துவிட்டு, அவர்கள் வேலை நிறுத்தத் திற்கு முன்பு பணியாற்றிய இடத்திற்கு மீண்டும் பணி வழங்கிடவும் மறுத்து வருகின்றனர்.இதுபற்றி பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட அளவிலான அலுவலர்களிடம் முறையிட்டபோது மேற் கண்ட இரண்டு விஷயங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறை ஆணையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர். ஏற்கனவே வேலைநிறுத்தக் காலம் ஊதியமில்லா விடுப்புக் காலமாக கருதப்பட்டுள் ளது. இது போராட்டத்தில் பங்கேற் றவர்களுக்குப் பல்வேறு தொடர் இழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, தற்காலிகப் பணிநீக்கக் காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்தியதுபோல், வேலைநிறுத்தக் காலத்தையும் பணிக்காலமாக முறைப்படுத்திட கீழ்நிலை அலுவலர்களுக்கு தாங்கள் தெளிவுரை வழங்கி உதவிட வேண்டுகிறோம்.அதேபோல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது மாநிலம் முழுவதும் பழிவாங் கும் நடவடிக்கையாக ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் தாங்கள் பணியாற்றிய இடத்திலிருந்து தொலைதூரப் பகுதிகளுக்கு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையில் குறிப்பாகப் பெண் ஆசிரியர்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டு தங்கள் வசிப்பிடத்திலிருந்து நூறு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மலைப்பகுதிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியைகள் சொல் லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக நூறு கி.மீ அப்பால் பணியிடமாற்றம் என்பது மிகப் பெரிய தண்டனையாக ஆசிரியர்களால் இன்றளவும் கருதப்படுகிறது. எனவே, வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதற்காக மேற்கொள் ளப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்து, வேலை நிறுத்தத்திற்கு முன்பு பணியாற்றிய இடத்திற்கு மீண்டும் பணி வழங்கி உரிய ஆணை பிறப்பிக்கவேண்டும்.மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்தினால்தான் 'ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து" என்பதன் முழுமையான பயன் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் தமிழக அரசின் உன்னதமான நோக்கம் நிறைவேறும் என்பதால் ஆசிரியர்களின் நலன் கருதிஉரிய தெளிவுரைகள் வழங்கி உதவுமாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில்  கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.