districts

img

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்துக! சாலைப் பணியாளர்கள் நூதனப் போராட்டம்

தஞ்சாவூர், ஜன.7-  41 மாத பணி நீக்க கால த்தை பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வலி யுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலைப் பணியா ளர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் நெடுஞ்சாலைத்துறை கோட் டப் பொறியாளர் அலுவல கம் முன்பு முக்காடு போட்டு  தர்ணா போராட்டம் நடை பெற்றது.  கோட்டத் தலைவர் பா. சரவணன் தலைமை வகித் தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் துவக்கி வைத் தார். சாலை பணியாளர் சங்க  மாவட்டச் செயலாளர் டி. ஜனார்த்தனன் விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் கள் எஸ்.கோதண்டபாணி, எஸ்.ஹேமலதா ஆகியோர் சிறப்புரையாற்றினர். சாலைப் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் கு.பழனிச்சாமி நிறைவுரையாற்றினார். கோட்டப் பொருளாளர் கோ. கருணாநிதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், ‘‘சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண் டும். சாலைப் பணியாளர் களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியருக்கான ஊதியம் ரூ.5,200 - ரூ.20,200, தர  ஊதியம் ரூ.1,900 வழங்க  வேண்டும். சாலை பணி யாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் தற்போதைய பணிக்காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நிய மனம் வழங்க வேண்டும். காலியாக உள்ள 10 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பணி யிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும்’’ உள்ளிட்ட  கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட நெடுஞ் சாலைத்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொன்முடி, மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மகேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செங்குட்டுவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.