tamilnadu

img

தீவிர சிகிச்சைப் பிரிவில் 'இயற்கை’ பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்!

சென்னை, மார்ச் 12-
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி, சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்ற 'இயற்கை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜெகநாதன்.
'ஈ',  பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை போன்ற ஆக சிறந்த படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.
மார்க்சிய சிந்தனை கொண்ட இவர், தனது படைப்புகளில் இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசிவருபவர்.
தற்போது, விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் 'லாபம்' என்ற திரைப்படத்தை இவர் இயக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) லாபம் படத்தின் எடிட்டிங் பணிகளில் இருந்த இவர், மதியம் தனது இல்லத்துக்குச் சென்றிருக்கிறார். நீண்டநேரமாகியும் ஸ்டூடியோவுக்கு திரும்பாததால் அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்றுபார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார் ஜனநாதன்.
உடனடியாக அவரை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.
மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால் ஜனநாதன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.